WHO IS READING THIS BLOG JESUS BLESS YOU

இந்தியாவில் இன்றும் வழக்கத்தில் உள்ள தேவதாசி முறை?

விபச்சாரம் ஒரு குலம் சார்ந்ததில்லை, தேவதாசி முறை ஒரு குலம் சார்ந்தது.
இந்தியா உட்பட எல்லா நாடுகளும் விபச்சாரத்தை ஒழிக்கப் பாடுபடுகிறது. ஆனால், வெற்றி காணவில்லை.
வளர்ந்த நாடுகளும் இயலாமைக்கு வெட்கப்படுகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு என இதை தடுக்க எத்தனை சீர்திருத்தங்கள் கொண்டுவந்தாலும், சில இடங்களில் விபச்சாரம் இன்னும் நடக்கிறது.
வறுமை, கல்வியின்மை, குடும்ப சூழலால் பெண்கள் விபச்சாரத்தில் சிக்குகிறார்கள்.
ஆனால், பதவி அதிகாரமும் வியாபார குறிக்கோளும் கொண்டவர்கள்தான், தடைமீறி இயக்குகிறார்கள்.
பழங்காலத்தில் மதம், ஜாதி ஏற்றத்தாழ்வு, ஏமாற்று நம்பிக்கைகள், கலைகள், கதைகள் என எல்லாமே கடவுளின் பெயரில்தான்.
இதை வஞ்சகர்கள் பின்னணியில் வெகுளிகளும் சேர்ந்தே உருவாக்கினார்கள். அதில் ஒன்றுதான் இந்த தேவதாசிகள் வழக்கம்.
கர்நாடகாவில் இன்னும் தேவதாசிகள்:
கர்நாடகாவில் தேவதாசி முறை இன்னும் வழக்கத்தில் உள்ளது. இந்தியாவில் இதுபோல இன்னும் மூன்று இடங்களில் உள்ளது.
திருமணமான செல்வந்தர்களுக்கு இன்னொரு மனைவி போல இருந்து சல்லாபம் செய்கிறார்கள். குழந்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். அந்த குழந்தைக்கும் கல்வி, நாட்டியம், பாட்டு, எல்லாம் கற்பிக்கிறார்கள்.
ஆனாலும் எதிர்காலத்தில் ’பொட்டுகட்டுதல்’ வழக்கத்தால் இன்னொருத்தி கணவனிடம் கள்ள வாழ்க்கை நடத்தவே தயார்படுத்துகிறார்கள். இது தலை விதியா? சமூக சதியா?
அந்த கணவனையும் கூட பலமுறை மாற்றிக்கொள்கின்றனர். தேவதாசிகள் சமுதாயத்தில் மதிக்கப்படுவது அவர்கள் கைப்பிடிக்கும் பணக்காரர்களை கருதியே. சுயமில்லாத அதுவும் இழிவே.
தமிழகத்தில் தேவதாசிகள்:
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில், தேவதாசி குலத்தில் பிறந்த மாதவிக்கு ’பொட்டுகட்டுதல்’ நிகழ்ச்சி நடக்கும்போது, கண்ணகியின் கணவனான கோவலன், வணிக செல்வந்தனாக வாழ்வதால் பெரும்பொருள் கொடுத்து, மாதவியை தனது உரிமையாக்கிக்கொள்கிறான். அதுவே காப்பிய கதையின் திருப்பமாக செல்கிறது.
சிலப்பதிகாரம் தமிழகத்தில் தேவதாசி வழக்கம் இருந்ததற்கான சாட்சி நூல். மேலும், கோவில்களிலும் தேவ அடியார்களாக பெண்கள் பணிசெய்துள்ளனர்.
செல்வந்தர்கள் வீடுகளிலும் பெண்கள் அடிமை பணிசெய்துள்ளனர். மகளை திருமணம் செய்து கொடுக்கும்போது, இந்த அடிமை பெண்களையும் ஒரு பொருள் போல தானமாக மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.
தமிழக சட்டமன்றத்தில் தேவதாசி முறையை ஒழிக்க சட்டம் கொண்டுவர கோரிக்கைகள் எழுந்தபோது, பழமைவாதியான ஒரு தேசிய தலைவர் ’தேவதாசிகள் இருப்பதில் தவறில்லை, மிருகமாக வரும் ஆண்களை மனிதர்களாக மாற்றும் பணியையே அவர்கள் செய்கிறார்கள்’ என பரிந்துரைத்து பேசினார்.
அதற்கு பதிலளித்த டாக்டர் முத்துலெட்சுமி ‘அப்படி மிருகமான ஆண்களை மனிதர்களாக்க அக்கறை இருந்தால் உங்க வீட்டு பெண்களை அனுப்புங்கள்’ என்று தேவதாசி குலத்தவர்களின் வேதனையை முன்வைத்தார். முடிவாக தமிழகத்தில் சட்டப்படி தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.
கோவில்களை அதிகாரத்தில் வைத்திருந்தவர்களும், அவ்வூரில் வாழ்ந்த செல்வந்தர்களும் கடவுளை பயன்படுத்தி, செய்துவந்த தொடர் விபச்சாரத்திற்கான தொலைநோக்கு திட்டமே இந்த தேவதாசி முறை என்பதை வளர்ச்சியடைந்த சமுதாயம் இப்போது தெளிந்துள்ளது.
வேலிதாண்டி மேய்ந்தால் தவறுதான். ஆனாலும், மாடுகளுக்கு பிடித்தமான வெள்ளாமை வேலிக்குள் இருக்கும் காரணம் போல, காம இச்சைகளை குற்றசெயல்கள் என ஒதுக்கினாலும் அது மனிதனுக்கு பிடித்தமான செயலாகவும் இருப்பதால், அந்த கட்டுப்பாடுகளோடு மனிதன் போராடுவது யதார்த்தமே.
செல்வாக்குள்ள மனிதர்கள் கட்டுப்பாடுகளை கடக்கும் ஒரு கலமாக தேவதாசி முறையை கையாண்டனர்.
இந்தியாவில் தேவதாசி பெயரில் நடந்தாலும் உலகம் முழுதும் வேறுபெயர்களிலும் வழக்கங்களிலும் இந்த விபச்சாரம் நடந்துள்ளதும் தெரிகிறது.
ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா கண்டங்களின் அனைத்து நாடுகளிலும் விபச்சார வழக்கங்களுக்கு நீந்திச்செல்ல முடியாத நெடும் வரலாறுகளே இருக்கின்றன.
நேபாளத்தில் கூட தேவதாசி வழக்கம் பத்து ஆண்டுகளுக்கு முன்புதான் ஒழிக்கப்பட்டது.
கடவுள் அமுதையும் விஷத்தையும் ஒரே பாத்திரத்தில் வைத்ததன் குழப்பமே. மனிதர்களால் இன்னும் இதை, தடுத்துக்கொள்ள முடியாத தடுமாற்றம்.
உலகில் நடந்த முதல் வியாபாரமே விபச்சாரம்தான். ஆனால், அந்த வியாபாரத்தை நாம் குடும்பம் என்ற வழக்கத்துக்குள் கொண்டு வந்துவிட்டோம்.
அதனால், விபரீதமான விபச்சாரத்தை ஒழிப்பது, நம் குடும்ப பெண்களுக்கும் சேர்க்கும் பெருமைதான்.


- மருசரவணன்
நன்றி http://india.lankasri.com/view.php?23DK2c6M442M4303lA3deO322o02e3Ag2bUmN3
Share:

Popular Posts

Blog Archive

Blog Archive