WHO IS READING THIS BLOG JESUS BLESS YOU

தேவ குமரா தேவ குமரா என்னை நிச்சிடுங்கள் song

தேவ குமரா தேவ குமரா  என்னை நிச்சிடுங்கள் 
Share:

ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்

“இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத். 18:10) 
...கர்த்தர், மனிதனை இந்த பூமியிலே சிருஷ்டிப்பதற்கு முன்பாக, கர்த்தர் தேவ தூதர்களை சிருஷ்டித்தார். அவர்களுடைய எண்ணிக்கை ஆயிரமாயிரமாயிருந்தது. அவர்கள் நம்மைப்போல மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டவர்களல்ல. தேவனுடைய ஜோதிப் பிரகாசத்திலிருந்து, அதாவது அழியாத மகிமையுள்ளவர்களாக, சிருஷ்டிக்கப் பட்டார்கள். ஆனால் தேவன், தேவதூதர்களுக்கு வந்த பெருமை மனிதனுக்குள்ளும் வந்துவிடாதபடி, தள்ளப்பட்டு போய்விடக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை யாக மனுஷனை மண்ணிலிருந்து, உண்டாக்கினார்.
சங்கீதக்காரன் சொல்லுகிறார், “நீர் அவனைத் தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும், கனத்தினாலும், அவனை முடிசூட்டினீர். உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்” (சங். 8:5,6).
மட்டுமல்ல, யார் யார் இரட்சிக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளாக மாறுகிறார் களோ, அவர்களுக்கு தேவதூதர்களையெல்லாம் பணிவிடை ஆவிகளாகத் (வேலைக்காரர்களாக) தந்தருளுகிறார் (எபி. 1:14). அதன்படி நம்மை தேவ தூதர்களுக்கு மேலாக உயர்த்திவிட்டார். தேவதூதர்கள், நமக்குக் கொடுக்கப்படுகிற பணிவிடை ஆவிகள். மறுபடியும் பிறந்தவர்கள் ஏழைகளாயிருந்தாலும், படிப்பறிவில்லாதவர்களாயிருந்தாலும், அவர்களை யாரும் அற்பமாய் எண்ணிவிட முடியாது. ஏனென்றால், அப்படிப்பட்ட ஒவ்வொருவருக்காகவும், கர்த்தர் தேவ தூதர்களை நியமித்திருக்கிறார். அவர்கள் பரலோகத்திலே தேவனை தரிசித்து, அவர்களுக்காக, உத்தரவாதம் செய்கிறார்கள்.
ஒரு ஐசுவரியவான் வீட்டு வாசலருகே, லாசரு என்ற மனிதன், நாய்க்குக் கிடைக்கக்கூடிய உணவு கூட கிடைக்காமல், தவித்தான். ஆனாலும் அவன் மரித்தபோது, தேவதூதர்களால் ஆபிரகாமின் மடிக்கு அழைத்துச் செல்லப்பட்டான். ஆனால் ஐசுவரியவானோ, பாவியாயிருந்தபடியால், அவனுக்கு ஆபிரகாமின் மடியும் கிடைக்கவில்லை. தேவதூதரின் பணியும் கிடைக்கவில்லை. இதனால் வேதம் சொல்லுகிறது, “அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு” (எபி. 13:2).
இரட்சிக்கப்படுகிற ஒவ்வொரு தேவபிள்ளைக்கும், ஒரு தேவதூதன் உண்டு. உங்கள் ஊழியத்துக்கு ஏற்ற விதத்திலே, நூற்றுக்கு அதிபதியைப்போல, நூறு தேவ தூதர்களையோ, அல்லது ஆயிரம் தேவதூதர்களையோ, கர்த்தர் தருவதுண்டு. தேவபிள்ளைகளை பாதுகாக்கிற சாதாரண ஊழியம் செய்கிற தேவதூதர்கள், எப்பொழுதும் பிதாவின் முகத்தை பரலோகத்தில் தரிசிப்பதை கண்டிருப்பீர்கள். ஆனால், உன்னதமான ஆவிக்குரிய ஜீவியம் செய்கிறதான, தேவபிள்ளைகள், எவ்வளவு சமீபமாக பிதாவினுடைய முகத்தை தரிசிப்பார்கள்!
இந்த உலகத்தில் நீங்கள், எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக தேவனாகிய கர்த்தரை நெருங்கி ஜீவிக்கிறீர்களோ, அதைப் போலவே, பரலோகத்திலும் அவருடைய முகத்தை மிக அருகிலே தரிசிப்பீர்கள். ஆகவே, தேவனுடைய இருதயத்துக்கு, மிகவும் நெருங்கி ஜீவிக்க பிரயாசப்படுங்கள்.
http://appamonline.com/2016/11/24/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
Share: 
Share:

கடைசி கால எழுப்புதலும் உபத்திரமும்

கடைசி கால எழுப்புதலும் உபத்திரமும் தேசத்தில் நடக்கும் திடுக்கிடும்  உண்மை இனி நடக்கபோவது என்ன இதன் பிண்ணனி  என்ன ?
Share:

Popular Posts

Blog Archive

Blog Archive