WHO IS READING THIS BLOG JESUS BLESS YOU

இயேசுவின் ரத்தம் படிந்த துணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது




இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்தபின்னர் அவரது உடலைப் பொதிந்து அடக்கம் செய்ததாக கருதப்படும் துணி இத்தாலி நாட்டின் தூரின் நகர தேவாலயத்தில் உள்ளது.
14.3 அடி நீளமும், 3.7 அடி அகலமும் கொண்ட இந்த துணியில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட ஒருவரது உடலின் முன் மற்றும் பின் பகுதி பதிந்துள்ளது. மேலும் ஈட்டியால் குத்தியதில் இயேசுவின் விலாவில் ஏற்பட்ட காயத்தின் வடுவும் இத்துணியில் காணப்படுகிறது.
கடந்த 1988ம் ஆண்டு இந்த துணியின் சிறு பகுதியை ஆய்வு செய்த அமெரிக்க விஞ்ஞானிகள், இது 13ம் நூற்றாண்டளவில் போலியாக தயாரிக்கப்பட்ட ஓவியமாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இத்தாலியின் பதுவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த துணியின் மற்றொரு பகுதியை தற்பொழுது ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். கார்பன் டேட்டிங் உள்பட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் முடிவில், இந்த துணி கி.மு.280க்கும் கி.பி.220க்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், துணியில் பதிந்திருப்பது மனித ரத்தம் என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், திடீரென ஏற்பட்ட மின்னல் போன்ற ஒளியால் இந்த ரத்தம் துணியில் படிந்திருக்க வேண்டுமென்றும் பேராசிரியர் பவோலோ தெரிவித்துள்ளார்.
இது எப்படி நிகழ்ந்தது என்பதை தங்களால் விளக்க முடியவில்லை எனவும் ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கிறிஸ்தவ அறிஞர்கள், தூரின் நகரில் உள்ளது இயேசுவின் உடல் அடக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட துணி என்பது உறுதியாகி விட்டது என்றும் இயேசுவின் உயிர்ப்பின்பொழுது, உருவான பேரொளியே இந்த துணியில் அவரது உருவத்தை பதியச் செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

Share:

Popular Posts

Blog Archive

Blog Archive