WHO IS READING THIS BLOG JESUS BLESS YOU

எனது கை தொலைபேசி

அண்மையில் எனது கை தொலைபேசி தொலைந்துபோனது.  எனவே ஒரு புதிய  கை தொலைபேசியை வாங்கி அதன் இலக்கத்தை சில நண்பர்களுக்கு மட்டும் கொடுத்தேன். சில மாதங்களின் பின்னர் எனது சகோதரர் ஒரு விடயம் தொடர்பாக  எனது புதிய கை தொலைபேசி இலக்கத்தை ஒருவரிடம் கொடுத்துவிட்டார். அவர் என்னிடம் நீண்ட நேரம் பேசினார். இறுதியில் அவரது குரல் மிகவும் பரிட்சியமாக இருந்தது. எனவே அவரிடம் வினவினேன். அவரும் என்னை அடையாளம் கண்டு கொண்டார்.
                              இச் சம்பவத்தின் பின்னர் எனக்கு ஒரு வேத வசனம் நினைவுக்கு வந்தது, காரணம் அவரது குரலை வைத்தே அவரை அடையாளம் கண்டு கொண்டேன்.  இதோ வேத வசனம்  
யோவா 10: 27
 என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின் தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர்.  
தேவனின் குரலை கேட்பது எப்படி ?

அன்றாடம் இடைவிடாது இறைவனிடம் இறைஞ்சி வேண்ட வேண்டும் .இதன் மூலம் உங்களது குரல் தேவனுக்கு பரிட்சியமாகும் .பின்னர் தேவனது குரல் உங்களுக்கு பரிட்சியமாகும்.நீங்களும் தேவனின் குரலை கேட்கலாம். கிறிஸ்தவர்களுக்கு வேதாகாமம் ஒரு கை தொலைபேசி போன்றது.வேதாகாமத்தை  வாசிப்பதன் மூலமும் தேவனை அறிவதுடன் அவரது குரலையும் நீங்களும் கேட்கலாம்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்


Share:

Popular Posts

Blog Archive

Blog Archive